திருச்செந்தூரில் காவலர்களுக்கு ஹோமியோபதி மருந்து – DSP பாரத்திடம் வழங்கிய பாஜக மருத்துவ அணி

திருச்செந்தூரில் கொரான தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு பி.ஜே.பி. மருத்துவ அணி சார்பில் காவல் துணை கண்காணிப்பாளர் பரத்திடம் டாக்டர் விஷ்வ பாரதி ஹோமியோபதி மாத்திரை அர்சானிக் ஆல்பம் 30 தொகுப்பை வழங்கினார்.

கொரானா பாதிப்பால் உலகம் முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரானா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், தூய்மைப்பணியாளர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் தன்னார்வளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு பி.ஜே.பி. மருத்துவ அணி சார்பில் காவல் துணை கண்காணிப்பாளர் பாரத்திடம் டாக்டர் விஷ்வ பாரதி ஹோமியோபதி மாத்திரை அர்சானிக் ஆல்பம் 30 தொகுப்பை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பி.ஜே.பி.மாவட்ட செயலாளர் நெல்லையம்மாள் மாவட்ட தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் கிருஷ்ணன் நகர செயலாளர் மகராஜன் கிளைத் தலைவர் தேவபிரான் உள்ளிட்ட பலர் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.

Source: Tamil anjal Seithigal