காவல்துறை புகார் ஆணையம் அமைக்க கோரிய வழக்கு – மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்
உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி தமிழகத்தில் ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்கப்படாததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி ஏ.ஜி.மவுரியா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் போல், மேலும் நடைபெறாமல் இருக்க உச்சநீதிமன்றம் வகுத்த வழிகாட்டுதல்களில் படி ‘காவல்துறை புகார் ஆணையம்’ அமைக்க மனுவில் கோரப்பட்டு உள்ளது.