பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிராம மக்களுக்கு மருத்துவ குணமிக்க “மூலிகை கஞ்சி”

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருவைக்குளம் கிராம மக்களுக்கு மருத்துவ குணமிக்க “மூலிகை கஞ்சி” வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

“உணவே மருந்து” எனும் நம் முன்னோர் கூற்றுப்படி, நோய் தீர்க்கும் அருமருந்தாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (15.07.2020) புதன்கிழமை காலை 7.00 மணியளவில் தருவைக்குளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய கொடிமரம் அருகில் மருத்துவ குணமிக்க “மூலிகை கஞ்சி” தருவைக்குளம் பங்குதந்தை அருட்திரு எட்வட் ஜோ அவர்கள் ஜெபம் செய்து துவக்கி வைத்தாா்கள்.

இந்நிகழ்ச்சியில் , தருவைகுளம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அமலதாசன் (எ) பழம், காமராஜர் நற்பணி மன்ற பொருளாளர் தேவ திரவியம், ஓய்வு பெற்ற ஆசிரியர் சூசை அந்தோணி, செல்வராஜ், பவுல் ராஜ், வில்சன், கிறிஸ்டின் ராஜ், வெல்லிங்டன், ராபின், ராஜன், கார்த்திக், ஜெயக்குமார்,கெய்ட்டின் ராஜ், டிக்கு ரோஸ், நீக்குலாஸ், பெட்ரிக், ராஜன், வில்சன், அனிட்டன் (தலைவா்) நீக்குலாஸ், ராம்பிரசாத், ஆலோசனை மாியான் (ஒன்றிய கவுன்சிலா்) ரெக்ஸ், பொன்சிங், லூா்துகான், ராஜேஷ், தருவைகுளம் சமூக ஆர்வலர் கென்னடி ராஜ் மற்றும் பொதுநலத் தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் S.A. லாரன்ஸ் அவர்கள் செய்திருந்தார்.