கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு பிறபித்துள்ளன. இதையடுத்து அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு மக்கள் வீதியில் நடமாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சாத்தான்குளத்தில் தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும் அதற்கென தனித்தனியாக நிதி ஒதுக்கி தன்னார்வலர் பரமசிவன் வீட்டில் உணவு தயாரித்து கடந்த மாதம் 27ஆம்தேதி முதல் சுமார் 250 பேர்களுக்கு, மருத்துவ பணியாளர்கள், பேருராட்சி தூய்மை பணியாளர்கள், வெளியூர்களில் இருந்து இங்கு பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவருக்கும் காலை, மாலை மற்றும் இரவு உணவு என மூன்று வேளையும் அவர்களை தேடி சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது. உணவு வழங்கி வரும் தன்னார்வலர்களை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.