25 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்: திட்ட இயக்குநர் தனபதி வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் புத்தன்தருவை ஊராட்சியில்  கரோனா தடுப்பு நடவடிக்கையொட்டி  ஊரடங்கு உத்தரவால்  பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புத்தன்தருவை ஊராட்சியில் நடைபெற்றது.  மாவட்ட ஊரக முகமை  திட்ட அலுவலர் தனபதி தலைமையில் 25 ஏழை குடும்பங்களுக்கு தொழில் அதிபர் மதின் அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் வழங்கி இருந்தார். நிகழ்ச்சியில் சாத்தான்குளம் ஓன்றிய  ஆணையர் பாண்டியராஜ்,  வட்டார வளர்சி அலுவலர் செல்வி ஊராட்சி தலைவர் சுலைகாபீவி, துணைத் தலைவர் பிர்தெளஸ், தட்டார்மடம் காவல் ஆய்வாளர்  ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொன்டனர்.