கொரோனா நிவாரண உதவி : தூத்துக்குடி பாரதி அரிமா சங்கம்

கொரோனா ஊரடங்கினால் அன்றாடம் தினக்கூலிகளாக வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வரும் எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்பட்டு வரும் சூழலில் எங்களது தூத்துக்குடி பாரதி அரிமா சங்கம் சார்பில் பாதிப்பிற்குள்ளான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. எங்களது அனைத்து உறுப்பினர்களது பங்களிப்பில் மட்டுமே வழங்கப்பட்ட இந்த நிவாரண உதவிகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10கிலோ அரிசி மற்றும் ரூ.600மதிப்பில் பருப்பு, எண்ணை, சர்க்கரை, தேயிலை உட்பட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

போல்டன்புரம், சுப்பையாபுரம், எஸ்.எஸ்.மாணிக்கபுரம், அழகேசபுரம், கால்டுவெல் காலனி, மூன்று செண்ட், பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளாக சார்ந்த 50 குடும்பங்களுக்கு நேற்று (03-05-2020) ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இந்த நிவாரண உதவிகளை தூத்துக்குடி பாரதி அரிமா சங்க தலைவர் லயன்.சகாயராஜ், செயலாளர்(செயலாக்கம்) லயன்.வசீகரன், பொருளாளர் லயன். டேவிட், உடனடி முன்னாள் தலைவர் லயன்.சுரேஷ் குமார், உதவி செயலாளர் லயன்.பற்குணம் ஆகியோர் வழங்கினர்.