200 ஏழை எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி : கோவில்பட்டி ரோட்டரி சங்கம்

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஏழை எளிய 200 குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.  

கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில் கோவில்பட்டி  ரோட்டரி  சங்கம் சார்பில் 200 ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பெருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ்  கலந்துகொண்டு 200 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தன்ராஜ் ராஜா, ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, ரவி மாணிக்கம், சீனிவாசன் , கண்ணன், வீராச்சாமி தாமோதர கண்ணன், செந்தில்குமார், சரவணன், பாலமுருகன். மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்க செயலாளர் முத்து  முருகன் வரவேற்றார். நிறைவாக உறுப்பினர் ஜெகநாதன் நன்றி கூறினார்.