5 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கிய 9ம் வகுப்பு மாணவன்!!!

கோவில்பட்டியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவன் தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள 5 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கியுள்ளார்.

கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்த ரெங்கசாமி – லல்லி தம்பதியின் மகன் ஞானராம்கோபால். இவர் கோவில்பட்டி கே.ஆர்.ஏ.பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். தனது பெற்றோர் கொடுக்கும் பணத்தினை சேமித்து வைத்து திருவிழா காலத்தில் தனக்கு தேவையான பொருள்களை வாங்கும் பழக்கம் கொண்ட ஞானராம்கோபால்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தனது வீடு அருகே பாதிக்கப்பட்டுள்ள 5 குடும்பங்களுக்கு சேமிப்பு பணமான 3200 ரூபாயில் இருந்து தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கனிகளை வழங்கினார். மாணவனின் இந்த செயல் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி பலரும் மாணவரை பாராட்டியுள்ளனர்.