காலாங்கரை கிராமத்து சிறுவர்களுக்கு அருட்சகோதரிகள் உணவுப் பொருட்கள் வழங்குதல்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி மரியாளின் ஊழியர் சபை சகோதரிகள் 28.04.2020 அன்று கோரம்பள்ளம் பஞ்சாயத்து வடக்கு மற்றும் தெற்கு காலாங்கரை கிராமத்து அனைத்து சிறுவர்களுக்கும் உணவுப் பொருளான பிஸ்கெட் பாக்கெட்டுகளை வழங்கினார்.

கொரானா வைரஸின் கோரத்தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ளும் விதமாக காலாங்கரை கிராமத்து சிறுவர்களுக்கு தூய மரியன்னை கல்லூரி மரியின் ஊழியர் சபை அருட்சகோதரியர் உதவினர். இந்த நலத்திட்ட சேவையில் அருட்சகோதரியருடன் பிரிட்டானியா மற்றும் ஐடிசி நிறுவனங்கள் இணைந்து உதவி செய்தது பாராட்டத்தக்கது . இந்த நலத்திட்டங்களை செயல்படுத்த பஞ்சாயத்து தலைவர், தன்னார்வத் தொண்டர் செல்வி. தங்க வல்லி மற்றும் கிராம மக்கள் ஒத்துழைப்பு தந்தனர். மரியின் ஊழியர் சபை ஆலோசகர் அருட்சகோதரி. ஜாய்ஸ் பேபி, மடத்து தலைமை அருட்சகோதரி. மரிய சாந்தி மற்றும் கிராமப்பணி புரியும் அருட்சகோதரி.குழந்தை தெரஸ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.