ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை : கருப்பட்டி, பனங்கற்கண்டு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட கருப்பட்டி, பனங்கற்கண்டு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் தனிமைப்படுத்தப்பட்ட 300 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு வழங்கும் வகையில் ரூபாய் 1.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப அவர்களிடம் சங்கத் தலைவர் திரு.நாகராஜன் அவர்கள் வழங்கினார். அருகில் சங்க ஆலோசகர் திரு.சிவசுப்பிரமணியன், உறுப்பினர்கள் திரு.அழகு வேல், திரு பாண்டியன் ராஜன் ஆகியோர் உள்ளனர்