சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டியை மீட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டில் சேர்த்த பெண் காவலர்கள். தூத்துக்குடி அரசு மருத்துவமனை கிழக்கு வாசல் பகுதியில் வயதான மூதாட்டி ஒருவர் நடந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி ஆயுதப்படை பெண் காவலர் உமாமகேஸ்வரி மற்றும் அபிதா ஆகியோர் அந்த மூதாட்டியை மீட்டு, அவரிடம் முகவரி கேட்டறிந்து அவரை மனிதாபிமானத்துடன் வீட்டில் கொண்டு போய் சேர்த்தனர். மூதாட்டியின் வீட்டிற்கு பத்திரமாக கொண்டு வந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் வீட்டில் முன்பிருந்தே கைதட்டி பாராட்டினர்.
