நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக இலவசமாக காய்கறிகள் வழங்கல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இந்திராநகரில்  ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 250 குடும்பங்களுக்கு நேதாஜி இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக மன்ற தலைவர் மாரிமுத்து ராமலிங்கம் ஏற்பாட்டின் பேரில் இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்  கருப்பசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காய்கறிகளை வழங்கினார். மன்ற பொருளாளர் சிந்து பானு, செயலாளர் சபரிபாண்டி, துணை செயலாளர்கள் கார்த்திகேயன், கோகுல் மற்றும் கட்டிமுத்து, கெங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.