பழையகாயல் அருகே உள்ள அகரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் கொரோனா உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.
நாடு முழுவது கொரானா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 17ம் தேதி வரை நீடிக்கப் பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் தினக்கூலி வேலை செய்வோர் உட்பட பல்வேறு தொழிலாளிகள் வாழ்வாதாரத்திற்கு அவதிப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு தேவையான அரிசி, மளிகை, மற்றும் காய்கறி பொருட்கள் அரசு மற்றும் தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பழையகாயல் அருகே உள்ள அகரம் டிஎன்டிடிஏ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் தனசீலன் தலைமை வகித்தார். அகரம் கிராம வி.ஏ.ஒ. ராமசாமி ஆசிரியை எபனேசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் 7 பேர் சார்பில் வருமானம் இல்லாமல் நடுநிலைப்பள்ளியில் பயிலும் 102 மாணவ-மாணவியர்களுக்கும், தூய்மை பணியாளர்கள் 4 பேருக்கும் மளிகை பொருட்களான பருப்பு, சீனி உள்ளிட்ட 11 வகையான கொரோனா நிவாரண உதவிப் பொருடகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் தலைமை வகித்தார். அகரம் கிராம வி.ஏ.ஒ. ராமசாமி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை எபனேசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்கள் 102 பேருக்கும் தூய்மைப் பணியாளர்கள் நான்கு பேருக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.