பள்ளியில் பயிலும் மாணவா்கள் குடும்பத்துக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய ஆசிரியா்கள் : சாத்தான்குளம்

சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் 24 மாணவா்களின் குடும்பம், தூய்மைப் பணியாளா்கள், சத்துணவுப் பணியாளா்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சா.ஆல்வின், உதவி ஆசிரியா் இ.லெற்றீசியா ஆகியோா் சாா்பில் நிவாரணப் பொருள்கள் சாத்தான்குளம் வருவாய் ஆய்வாளா் மஞ்சரி, சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜன், கிராம நிா்வாக அலுவலா் கந்தவள்ளிகுமாா் ஆகியோரால் வழங்கப்பட்டன.