தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கி வரும் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ்

உதவி ஆய்வாளர் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு ஐந்தாவது கட்ட நிவாரண பொருட்கள் வழங்கல். நேற்று திருநங்கைகள் உள்பட 75 நபருக்கு உணவு பொருட்களை உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் அவர்கள் வழங்கினார்.

உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக‌ மக்களை பாதுகாக்க அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக‌ பாதிக்கப்பட்டு வருகின்றவர்களுக்கு உணவு முதல் உணவு பொருட்கள் வரை அரசு நேரடியாக வழங்கியும் வருகிறது. அரசுக்கு ஆதரவாக பல தன்னார்வலர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும், காவல் துறையும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குடிமை பொருள் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் அவர்கள் சார்பில் அவர்களது நண்பர்களின் உதவியைக் கொண்டு ஏழை, எளிய மக்கள், திருநங்கைகள், விதவை பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர்கள் என தினமும் குறைந்த பட்சமாக 50க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்களாக அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 20 வகையான பலசரக்கு மற்றும் காய்கனிகள் வழங்கி வந்தார்கள்.

இதில் நேற்று (05-05-2020) திருநங்கைகள் உள்பட சுமார் 75 நபர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருமே அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும் உணவு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இன்று வழங்கிய உணவு பொருட்களுக்கு தேவையான நிதி உதவியை உதவி ஆய்வாளரின் நண்பர்களான சக்திவிநாயகபுரம் பைனான்சியர் முனியசாமி அவர்கள் மற்றும் இளம் தொழிலதிபர் திரு. சிவா அவர்களின் நிதி உதவியைக் கொண்டு உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் அவர்கள் உணவு பொருட்களை வழங்கினார்கள். உதவி பெற்ற அனைவருமே உதவி ஆய்வாளரின் ஐந்தாம் கட்ட மக்கள் பணிக்கு நன்றி கூறிக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது வள்ளிநாயகபுரம் கேபிள் டிவி ஆப்பரேட்டர் திரு. செல்வம் அவர்களும் , தூத்துக்குடி இளையவேந்தன் அறக்கட்டளையை சார்ந்த திரு. இசக்கிமுத்து அவர்களும் உடன் இருந்து உதவி ஆய்வாளரின் மக்கள் பணிக்கு உதவியாக இருந்தனர்.