பூப்பாண்டியபுர மக்களுக்கு கோவிட்-19 நிவாரணம்: தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக இன்று (09.05.2020) பூப்பாண்டியபுரத்தில் இப்பணி தொடர்ந்தது. கோவிட் – 19ன் ஊரடங்கினால், இங்கு வாழும் ஏழை மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட சூழலில், தூய மரியன்னை கல்லூரி 50 குடும்பங்களுக்கு காய்கறிகளை வழங்கியது. இப்பணிக்கான பொருளாதார உதவிகளை, மனிதாபிமான அடிப்படையில் பேராசிரியர்கள் வழங்கினார்கள்.

மேலும் தாளமுத்துநகா் காவல்துறை ஆய்வாளா் திருமதி. பிரேமா ஸ்டாலின் அவர்களின் கண்காணிப்பின் முன்னிலையில், தாவரவியல் துறைத்தலைவர் திருமதி. குளோரி மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ் அவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். நிருபர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள், பூப்பாண்டியாபுரம் ராமசாமி, இராஜபாளையம் தொம்மை அந்தோணி ஆகியோா் பூப்பாண்டியபுரத்திலுள்ள மக்களிடம் நிவாரண பொருட்கள் சென்றடைய உறுதுணை புரிந்தனர்.