உணவின்றி தவிப்பவர்களுக்கு இருக்கின்ற இடத்திற்கே உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது : மாநகராட்சி பணியாளர்கள்

தூத்துக்குடியில் உணவின்றி தவிப்பவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டால் உணவு வழங்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.


செய்திக்குறிப்பில் :- தமிழக அரசு கரோனா நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வேலையின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழை கூலித் தொழிலாளர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள், யாசகம் பெறுபவர்கள் மற்றும் நரிக்குறவர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இருக்கின்ற இடத்திலேயே கண்டறிந்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது . மேலும் மாநகர பகுதிகளில் உணவின்றி தவிக்கும் பொதுமக்கள் கீழ்க்கண்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கைபேசியில் தொடர்பு கொண்டு உணவுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வடக்கு மண்டலம்
சுகாதார அலுவலர் ஹரி கணேசன் 9842530292, சிறப்பு வருவாய் அலுவலர் கேவி கணேசன் 99944025682, வருவாய் உதவி ஆய்வாளர்கள் கண்ணன் 9486025771, ராதாகிருஷ்ணன் 9791426290.
கிழக்கு மண்டலம் 
சுகாதார அலுவலர் ராஜசேகரன் 8056347075, சிறப்பு வருவாய் ஆய்வாளர் ஜான்சன் 9244621614, வருவாய் உதவியாளர்கள் செந்தில்குமார் 7904819064, கணபதி சுந்தரம் 9842364387. 
மேற்கு மண்டலம் 
சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் 9443528621, சிறப்பு வருவாய் ஆய்வாளர் வீரக்குமார் 9994636796, வருவாய் உதவியாளர்கள் ராஜேஷ் 8072528511, முனிராஜ் 9629206705
தெற்கு மண்டலம் 
சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் 9080769246, சிறப்பு வாய்வு வருவாய் ஆய்வாளர் நசரேன் 9865429481, வருவாய் உதவி ஆய்வாளர்கள் மலைச்சாமி 9442466256, ஆசீர் 9790087870