பார்வையற்ற குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல் : குடிமை பொருள் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பொதுமக்களை பாதுகாக்க ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவினால் தினக்கூலியினர் பலரும் தனது அன்றாட தேவைகளை பெற முடியாமல் தினமும் பாதிக்கப்பட்டு வருவதை தெரிந்து கொண்ட  தன்னார்வலர்களும், காவல்துறையினரும், ஏனைய சமூக அமைப்புகளும் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளும் இவர்களுக்கான தேவைகளை கேட்டு அறிந்து தொடர்ந்து உதவிகளை செய்து வருகின்றனர். இதில்,  தூத்துக்குடி குடிமை பொருள் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் வேல்ராஜ் மார்ச் 02ம் தேதி முதல் தனது மக்கள் பணியை தொடங்கி வைத்தார். தினமும் சுமார் 50 நபர்களுக்கு 15 வகையிலான காய்கறிகள், 12 வகையிலான மசாலா சாமான்களை உள்ளடக்கிய பொட்டலங்கள் வழங்கப்பட்டது. மார்ச் 02ம் தேதி முதல் தொடங்கிய இந்த மக்கள் பணியில் இன்றைய (12-04-2020) நாளின் உதவியை தூத்துக்குடி சில்வர்புரம் லூசிய அருகில் உள்ள  பார்வையற்றோர் குடியிருப்புகளில் வசிக்கின்ற குடும்பங்களுக்கு தொமோசியன் கூடை பந்து அகடாமி சார்பாக, குடிமை பொருள் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் செல்வி அவர்கள் அரிசி, மசாலா சாமான், காய்கறி பொருட்ககளை வழங்கினார். 
நிகழ்வில் தூத்துக்குடி செயிண்ட் தாமஸ் பள்ளி கூடை பந்து பயிற்சியாளர் பொன்மாரி,  தொமோசியன் அகாடமி சார்பாக விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள்  துரை, இசக்கி முத்து, முத்தரசன் மற்றும்  இளையவேந்தன் இரத்த தான அறக்கட்டளை பொறுப்பாளர்கள் சேக்முகமது  ஆகியோர் கலந்து கொண்டனர்.