முதியோர்களுக்கும் மளிகை பொருட்களை வழங்கினார் தூ.டி வட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தாசில்தார்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதை முன்னிட்டு அரசும், தனியார் அமைப்புகளும் முதியோர், ஆதரவற்றாேருக்கு நிவாரண பொருட்கள், உதவிகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தூத்துக்குடி வட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் , சமூக நலத்துறையின் ஒன் ஸ்டாப் சென்டர் பணியாளர்களும் இணைந்து கோக்கூர் நியு ஆன்மாவின் அன்புக் காப்பகத்திலுள்ள 25 முதியோர்களுக்கும், மாசிலாமணி புரத்தில் உள்ள நியு பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள 35 முதியோர்களுக்கும் மளிகை பொருட்களை வழங்கினார்.

Credits: Tutyonline