தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய மைய இயக்குனர் புவியரசன் இன்று அளித்த பேட்டியில் கூறிய விவரம் : தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல், மிதமான மழை பெய்யும். அறிவிப்பின் படி மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை காண வாய்ப்பு உள்ளது.
