nilavampu

12 பேருக்கு டெங்கு பாதிப்பு எதிரொலி தருவைகுளத்தில் சுகாதார பணிகள் தீவிரம்

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் . தொடர்ந்து பரிசோதனை செய்தபோது அவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதன் படி அந்த பகுதியை சேர்ந்த 12 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றனர் .

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணலீலா தலைமையில் தருவைகுளம் பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் சுமார் 100 பேர் தருவைகுளம் வந்தனர்.

அவர்கள் தருவைகுளம் முழுவதும் வீடு, வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். புகைமருந்து அடித்தனர். வீடுகளில் அருகே தண்ணீர் தேங்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும், நல்ல தண்ணீரை மூடி வைத்து பயன்படுத்தவேண்டும் என்றும் அறிவுறித்தினார். மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்தனர்.

இந்நிலையில் இன்று 2வது நாளாக தருவைக்குளம் பகுதிகளில் சுகாதார துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர்.மேலும்,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாநகராட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இதே போல் தருவைக்குளத்தில் இன்று காலை காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *