பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல் : தருவைக்குளம்

தருவைக்குளம் கிராமத்தில் கொரோனா தொற்றினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 29.04.2020 இன்று தருவைக்குளம் ஊராட்சி மன்றம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (சத்துணவு), வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி.ஊ) துணைவட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை), துணைவட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம் 4) ஊராட்சி மன்றத்தலைவி கா.காடோடி, ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் ஆகியோர் கலந்து கொண்டு கபசுரகுடிநீர் வழங்கினார்கள்.