காவல்துறையினருக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் கபசுரக் குடிநீர் வழங்கினார்.

இன்று (27.04.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கபசுரக்குடிநீர் வழங்கினார். இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அந்தந்த காவல் நிலையங்கள் மூலமாக காவல்துறையினர் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தூத்துக்குடி ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் திரு. மாரியப்பன், ஆயுதப்படை ஆய்வாளர் திரு. மகேஷ் பத்மநாபன், உதவி ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள், ஆயுதப்படை காவலர்கள், மாவட்ட காவல்துறை அலுவலக அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் இதர காவலர்கள் அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.