நடிச்ச நாலு காசு பாத்திரலாம் போல, இயக்குனர் பொழப்பு மட்டும் ஆகாது – கௌதம் மேனன்.

சமீபகாலமாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவின.  தமிழ் படங்களிலும் கெஸ்ட் ரோலிலுல், வில்லன் நடிகர்களுக்கு டப்பிங் செய்து நடித்து வந்த கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிவரும் எப்ஐஆர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது தன் தாய்நாடான கேரளாவில் நடிகராக களம் இறங்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு பகத் பாசில் மற்றும் நஸ்ரியா நடித்த டிரான்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்தது. நடிச்ச நாலு காசு பாத்திரலாம் போல, இயக்குனர் பொழப்பு மட்டும் ஆகாது என புலம்பி வருகிற கவுதம் மேனன் நடிகராகவும் பணம் சம்பாதிக்கலாம் என முடிவெடுத்து விட்டதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.