மனஉறுதி


திடமான எண்ணங்கள், எதிர்மறையான சூழ்நிலைகளை விலக்கிவிடுகின்றது.


சிந்திக்க வேண்டிய கருத்து:
அதிகமான எதிர்மறையான சூழ்நிலைகள் நம்முடைய வழியில் வரக்கூடும். அவை, துன்பம், வலி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அச்சமயத்தில், அவ்வாறான கஷ்டங்களை சமாளிக்க இயலாத உணர்வை ஏற்படுத்துவதோடு, அவை என்றும் நிலைத்திருப்பதாகவும் தோன்றுகின்றது.


செயல்முறை:
நான் சந்திக்கும் கஷ்டங்கள், கடந்து செல்கின்ற மேகங்கள் என நான் அறிந்துகொள்வது அவசியமாகும். இம்மேக கூட்டங்கள், சில நேரங்களில் என்னை சுற்றி கூடுகின்ற தற்காலிகமானவை – அவை விரைவாகவோ அல்லது தாமதமாகவோ மறைந்து விடும். எந்தவொரு பிரச்சனையும், எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்ற புரிந்துணர்வு, என்னுடைய பிரச்சனைகளை தீர்பதற்கு, தேவையான மனஉறுதியை வளர்த்துக்கொள்ள எனக்கு உதவி செய்கின்றது. அதன்பிறகு, எச்சூழ்நிலையையும் என்னால் சுலபமாக எதிர்நோக்க முடியும்