அரசு சார்பில் கோவிட்- 19 கரோனா தடுப்பு உபகரணங்கள்

சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கோவிட்- 19 கரோனா தடுப்பு உபகரணங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உயர்கல்வித் துறைசார்பாக அரசு கல்லூரிகளுக்கு கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு, தமிழக அரசின் மாநில பேரிடர் மறுமொழி நிதி மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோவிட் 19 கொரோனா தொற்று தடுக்க உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஒதுக்கீடு செய்யபட்ட நிதியில் சானிடைசர், முககவசம், கிருமிநாசினி,உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதல் செய்யபட்டு,கல்லூரி முதல்வர் -முனைவர் இரா. சின்னத்தாய் தலைமையில் மருத்துவ உபகரணங்கங்களை பணியாளர்களுக்கு வழங்கி, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பேராசிரியர்கள், மாணவிகள் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் ஜெயபிரகாஷ், புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன் மற்றும் கல்லூரிப்பேராசிரியர்கள், அலுவலகப்ப ணியாளர்கள் கலந்து கொண்டனர்.