தமிழகத்தில் எவரும் பட்டினி இல்லை : முதல்வர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் நேற்று (05.05.20) பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையில் அவர் கூறியதாவது : தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அம்மா உணவகங்களிலும் நாளொன்றுக்கு ஏழு லட்சம் பேருக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கின்றோம். மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும், முதியோர்களுக்கும் உணவு அளித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே தமிழகத்தில் எவரும் பட்டினி இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கியுள்ளது.

தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் செய்திருக்கிறோம். சுமார் 36 லட்சம் பேருக்கு கருணைத் தொகை கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்களுக்கு அனைத்து அரிசி நாங்க என்ற குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. விலையில்லா அரிசி, விலையில்லா பருப்பு, விலையில்லா சர்க்கரை, விலையில்லா எண்ணெய் ஏப்ரல் மாதமும், மே மாதமும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஜூன் மாதமும் தொடர்ந்து வழங்கப்படும். இன்றைக்கும் விலையில்லாமல் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் அனைத்துமே அம்மாவுடைய அரிசி கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்று கூறினார்