நாட்டுப்படகில் மீன்பிடிக்க அரசு அனுமதி

நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் நிலையில் நாட்டுப்படகில் சென்று மீன் பிடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஊரடங்கில் மீன் பிடித்தலுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிக்கலாம் என்று தமிழக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. மீன்களை இறக்குதல், சந்தைபடுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு குறைந்த அளவிலான ஆட்களையே பயன்படுத்த வேண்டும். நொய்தொற்று பரவாமல் தடுக்க முகக்கவசம் உள்ளிட்டவைகளையும் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் நிலையில் விசைப்படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதியில்லை என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.