தமிழக அரசு பனங்கள் இறக்க தடை நீக்க வேண்டும்!!!

தமிழக அரசு பனங்கள் இறக்க தடை நீக்கி அனுமதி வழங்க கோரியும் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் பனை தொழிலாளர்கள் காக்க பனை வாரியம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி இன்று ராமேஷ்வரம் வழிவிடு முருகன் கோவில் முன்பிருந்து அரண்மனை பதநீர் மஹால் வரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் பனைமரம் காக்கபடவேண்டும் பனை தொழிலாளர்களுக்கு இழப்பீடும் நிவாரணமும் உயர்த்தி வழங்கப்படவேண்டும் பனை வாரியம் செயல்படுத்தபடவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் பல்வேறு அமைப்பினரும் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு பேரணியில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் மா. ஃபா. பாண்டியராஜன் அவரகள் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து அமைச்சா் மா. ஃபா. பாண்டியராஜன் பேசும் போது, கள் பற்றி பொதுமக்கள் பார்வையில் நல்ல விஷயம் என்பதை உருவாக்க வேண்டும் அப்போது அரசு ஒரு நல்ல முடிவு எடுக்கும், இது தற்போது கதர்துறை அமைச்சகத்தோடு செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் தமிழில் பெயர் வைக்க வணிகர்களே விரும்ப வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். பனை ஏறும் தொழிலாளர்களுக்கு பனை ஏற கருவி வழங்க நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும்.

பனை வளர்ச்சி வாரியத்திற்கு உயிர் ஊட்டுவது, பனை தொழிலாளர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது, பனை பொருட்களை சந்தை படுத்தும் நிறுவனங்களை அமைப்பது, 800 பொருட்கள் பனையில் இருந்து உருவாக்கப்படுகிறது இதனை சந்தைப்படுத்த தனி அமைப்பு உருவாக்கப்படும்.

அரசு மொழி தமிழகத்தில் தமிழ் வணிக நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால் அதன் மீது விதிக்கப்படும் கட்டணம் அதிகப்படுத்த முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். பனை தொழிலாளர் வாரியம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

720 கூட்டுறவு இணையம் ஒன றினைத்து 8 மாவட்டங்கள் இணைத்து பனை வெல்ல வாரியம் செயல்பட்டு வருகிறது, பனை வளர்ச்சி வாரியம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வால் உருவாக்கப்பட்டது. கொற்கையில் அருங்காட்சியகம் அமைக்க அரசிடம் கேட்டுள்ளோம். அழகன்குளம் அகழாய்வு குறித்து 10 நாட்களில் அறிக்கை வெளியிடப்படும் என்று கூறினார்.