தமிழக அரசின் ரூ.2ஆயிரம் நிதி வழங்கும் பணி மற்றும் மளிகை தொகுப்பு: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி மற்றும் 14 வகையான சிறப்பு நிவாரண மளிகை தொகுப்பு வழங்கும் பணிகளை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ககரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் தவணையாக ரூ. 2000 வழங்கும் திட்டம் மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான சிறப்பு நிவாரண மளிகை தொகுப்பு வழங்கும் பணிகள் இன்று துவங்கியது. தூத்துக்குடி பூபாலராயர்புரம் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் இன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாவது தவணையான ரூ. 2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் ஆகியோர் உடன் இருந்தனர்.