சிறப்பு பஸ் மூலம் பணிக்கு திரும்பிய அரசு ஊழியர்கள்: தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு அரசு துறைகளில் குறைந்த அளவு ஊழியர்களே பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் இவர்கள் பணிக்கு சென்று வர வசதியாக அரசு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சுகாதார பணியாளர்கள், போலீசார் பணிக்கு செல்வதற்காக மாவட்டம் முழுவதும் 11 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களையும் அரசு ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதைப்போல் இன்று காலை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து சாத்தான்குளத்திற்கு 7.10-க்கு, 7.30-க்கு கோவில்பட்டிக்கும் மற்றும் 8.00 மணிக்கு திருநெல்வேலிக்கு அரசு பேருந்து அரசு ஊழியா்களை அழைத்து சென்றது.