கொடுப்பது

சுய-முன்னேற்றத்தில் உறுதியாக இருப்பதென்றால், கொடுப்பவராக இருப்பதாகும்.


சிந்திக்க வேண்டிய கருத்து:
நம்மிடம் அதிகமாக இருக்கும்போதும், நாம் எப்போதும் மேலும் அதிகமாகவே தேடிக் கொண்டிருக்கின்றோம். சூழ்நிலைகளிலும் மற்றவர்களிடமும், நமக்கு பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன. மேலும் அவற்றிலிருந்து நாம் என்ன ஆதாயம் அடைய முடியும் என தொடர்ந்து சிந்திக்கின்றோம். இவ்வாறான எதிர்பார்ப்புகள், நம்மை, சுய-முன்னேற்றத்திற்காக மற்றவர்களை சார்ந்து இருக்கச் செய்கின்றது. இவ்வாறு செய்வதால், சூழ்நிலைகள் சரியாக இருக்கும்போதும் அல்லது மற்றவர்கள் ஒத்துழைக்கும் போதும், மட்டுமே நம்மால் முன்னேற்றத்தை அனுபவம் செய்ய முடியும்.


செயல்முறை:
நான் பெற விரும்புவதை பற்றி சிந்திப்பதற்கு பதிலாக, என்னிடம் இருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதனால், இவ்வளங்களை பயன்படுத்தி, என்னுடைய சிறப்பான முயற்சியின் மூலம், நான் விரும்புவதை, என்னால் பெற முடியும். இவ்வாறு செய்வது, நான் சந்திக்கும் சூழ்நிலைகள் நேர்மறையாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், நான் தொடந்து முன்னேற்றத்தை சந்தோஷமாக அனுபவம் செய்ய அனுமதிக்கின்றது.