தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த வினீத் (25) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். ஒரு காலக்கட்டத்தில் அந்தப் பெண்ணை நினைத்து திருமணம் செய்து கொள்ள வினீத் மறுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை ஏற்கனவே வீடியோ எடுத்த வைத்திருந்த வினீத் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது, மேலும் வற்புறுத்தினால் வீடியோவை வெளியே விட்டுவிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார். ஆனால் வினித்தின் மிரட்டலுக்கு பயப்படாத அந்த பெண் தூத்துக்குடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் ஒரு மாத காலத்துக்குப் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட சூப்ரண்ட் அலுவலகத்தில் அந்த பெண் மீண்டும் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து சூப்ரண்டு, போலீஸாருக்கு அழுத்தம் கொடுக்க விரைவில் வினீத்தைக் கைது செய்து அவரிடம் இருந்து வீடியோவைக் கைப்பற்றுவோம் என காவல்துறை உறுதி அளித்துள்ளனர்.
