தூய்மை காவலர்களுக்கு முழு பாதுகாப்பு கவச உடை: மாப்பிளையூரணி சுமங்கலி மகளிர் குழு

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தூத்துக்குடி மாப்பிளையூரணி பஞ்சாயத்து சுமங்கலி மகளிர் குழு சார்பில் கொரானா தடுப்பு மருந்துகள் (கிருமிநாசினி, லைசர், சோப்பு) மற்றும் மருத்துவ துறையில் பணிசெய்பவர்களுக்கு கொரானா வைரஸ் பரவுதல் தடுக்கும் விதமாக பாதுகாப்பு உடைகள் மாஸ்க், கிளவ்ஸ் அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் திரு. சந்தீப் நந்தூரி அவர்களின் உத்திரவு படி கொரானாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கு ஜிப் பேக் ஆகியவற்றை தயாரித்து விநியோகித்தனர்.

தற்போது மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் தூய்மை காவலர்களுக்கு மேல் சட்டை (Coat) தயாரிக்கும் பணி மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் உத்தரவின் படி தூத்துக்குடி தூய்மை பணியாளர்ளுக்கு ஆரஞ்சு நிற முழு பாதுகாப்பு கவச உடை மற்றும் திருச்செந்தூர், கயத்தாறு பகுதிகளுக்கு பச்சை நிற முழு பாதுகாப்பு கவச உடை தயாரித்து உள்ளனர்.

மேலும் இந்த வாய்ப்பினை அளித்த மாப்பிளையூரணி பஞ்சாயத்து தலைவர் திரு. சரவணகுமார் அவர்களுக்கும், திருமதி ரேவதி PO அவர்களுக்கும், மகளிர் திட்டத்திற்கும் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சுமங்கலி மகளிர் குழு தலைவி அன்னலட்சுமி அவர்கள் அவர்களது நன்றியினை தெரிவித்தார்.