தூத்துக்குடியில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு: ஆட்சியர் அறிவிப்பு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி 04.07.2020 இரவு 12 மணி முதல் 06.07.2020 காலை 6 மணி வரை எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

மேலும் 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஆகிய ஞாயிற்றுகிழமைகள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்
நந்தூரி, தெரிவித்துள்ளார்

இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.மேலும் தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை சுய ஊரடங்கு உத்தரவினை பல்வேறு தளர்வுகளுடன் நீடித்துள்ளார்கள்.

அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுபாட்டை விதித்தாலும்
மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த நோய் பரவலை தடுக்க இயலாது எனவும், அரசால் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழக அரசு பொதுமக்கள் அவசிய பணிகளுக்கு மட்டும் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். வீட்டில் இருந்து வெளியே வரும்போது முககவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும்,

அடிக்கடி சோப்பு மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் எனவும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து,அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என அரசால் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்தும் விதமாக இரண்டாவது சனிக்கிழமை அன்று ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகங்களை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்திட 05.07.2020, 12.07.2020, 19.07.2020, 26.07.2020 ஆகிய 4 ஞாயிற்றுக்கிமை எந்த வித
தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் பால் விநியோம்,
மருத்துவமனைகள், மருத்து கடை, மருத்துவ வாகனங்கள், அவசர ஊர்தி, மருத்துவ வசதிகளுக்கு தனியார் வாகனங்கள் இயக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 04.07.2020 இரவு 12 மணி முதல் 06.07.2020 காலை 6 மணி வரை எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

பால் விநியோம், மருத்துவமனைகள், மருத்து கடை, மருத்துவ வாகனங்கள், அவசர ஊர்தி, மருத்துவ வசதிகளுக்கு பயன்படுத்த தனியார் வாகனங்கள்
இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஆகிய ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
எனவே முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டில் இருந்து வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும்,

கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.