தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு வேண்டும் – வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா நோய்தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மீண்டும் மாநகராட்சி பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்திடக்கோரி கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநில துணைத்தலைவர் வெற்றிராஜன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலனுக்கு, பரவி வரும் நோய் தொற்றின் கால சூழ்நிலையை மனதில் கொண்டு மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்திடக்கோரி கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது

மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் அவர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பாக தங்களுக்கு வணக்கத்தையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம். இந்த இக்கட்டான நோய் தொற்று காலத்தில் நமது தூத்துக்குடி மாநகராட்சியை கண் போல் கட்டி காத்து வரும் தங்களது பணி சிறப்புமிக்கது. ஆனாலும் தற்போது நமது மாநகராட்சி பகுதியில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்று பரவல் பொதுமக்களையும் , சமூகப் பணியாளர்களையும், வியாபாரிகளையும் தாக்காதவாறு பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சி பகுதியில் வருகின்ற 30/07/2020 – வரையில் முழு ஊரடங்கை அமுல்படுத்திட வேண்டும், என இவ்வமைப்பின் மாநில துணைத் தலைவர் வெற்றிராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.