தூத்துக்குடி மாவட்டத்திலும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு இன்று கடைபிடிக்கப்படுகிறது இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்ட உள்ளது இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் மட்டும் சென்று வருகின்றனர் மற்ற பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 68 இடங்களில் காவல்துறையினர் சோதனை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் இதுபோல் தூத்துக்குடி நகரத்தில் மட்டும் 28 இடங்களில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அத்தியாவசிய பணிகள் செல்வதைத் தவிர்த்து மற்றவர்களின் வாகனங்கள் இந்த உலகமே நேரத்தில் வெளியில் வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் இந்த பணிகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அத்தியாவசியப் பணிகளை தவிர்த்து வரக்கூடிய மற்ற வாகனங்கள் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்த அவர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் காவல்துறையினர் இந்த பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்நிலையங்களில் வாகன சோதனை மற்றும் போக்குவரத்தை சீர் செய்வதற்கு உதவியாக இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நபர்களை இனிமேல் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன சோதனை உள்ளிட்ட பணிகளில் இவர்களை இனி பயன்படுத்த கூடாது என்று காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்