விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் விலையில்லா மண் விற்பனை…

ஏரிகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் உள்ள களிமண்,வண்டல் மண், சவுடு மண், சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் விலையில்லாமல் பெற்று கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்ற நீர் கட்டமைப்புகளை மக்கள் பங்களிப்புடன் தூர்வாரி அவற்றின் கொள்ளவினை மீட்டெடுக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் குடி கிராமத்து திட்டம் 2017-ல் தொடங்கப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த நீராதாரங்களில் பருவமழையின் போது வழக்கத்தைவிட நீர் அதிகம் தேக்கப்பட்டு விவசாயத்திற்கும், குடிநீர் பயன்பாட்டிற்கும் பெருமளவு பயன்படுத்தப்பட்டது.

மேலும் இந்த நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மண், சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு வழங்கும் பொருட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி அரசாணை எண் 50, தொழில்துறை நாள் 27.04.2017 அன்று வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 6 லட்சத்து 69 ஆயிரத்து 900 விவசாயிகளும் மண்பாண்டத் தொழில் புணைவரும் பயன்பெற்றுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கிலிருந்து விவசாய பணிகளுக்கு ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இக்கோடைகாலத்தின் பாசனத்திற்கான நீர் திறப்பு நிரப்பப்பட்டு இருப்பதால் விவசாயிகள் தங்கள் இல்லங்களுக்குத் தேவையான களிமண், வண்டல் மண், சவுடு மண், சரளை மண்ணை விலையில்லாமல் தங்கள் கிராமத்திலோ அல்லது அருகாமை கிராமத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று எடுத்துக்கொள்ளலாம்.