ரேஷன் பொருட்களுக்கு டோக்கன் மே 2,3 ம் தேதி வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப்பொருட்கள் வருகிற மே 4-ம் தேதி முதல் விலையின்றி பொதுமக்களுக்கு வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக பெறுவதற்கு டோக்கன்கள் மே 2 மற்றும் மே 3 -ம் தேதிகளில் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தரப்படும் என ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் தடைச் செய்யப்பட்ட பகுதியில் வசிப்பவர்களும், நேரில் வந்து பொருள்களை பெற்றுச் செல்ல இயலாத மிக வயதானவர்களுக்கும் மற்றும் மாற்று திறனாளிகளுக்கும் அத்தியாவசியப்பொருட்கள் நேரில் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.