தமிழக அரசு சார்பாக வழங்கப்பட உள்ள இலவச ரேஷன் பொருள்கள், ரூ. 1000 நிவாரணம்: ஏப்ரல் 2 முதல் விநியோகம்

கரோனா வைரஸ் பாதிப்பு நிவாரணமாக, அரிசி கார்டுதாரரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கிட அரசு முடிவெடுத்துள்ளது.

இதன்படி அவற்றின் விநியோகம், ஏப்ரல் 2ம் தேதி முதல் துவங்குகிறது. எனவே ரேஷன் கடைகள், ஏப்ரல் 3ம் தேதி முதல் வழக்கம் போல செயல்படும் என தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இதுவரை
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை என வழக்கத்தில் இருந்தது. அதற்கு மாற்றாக, தற்போது ரேஷன் கடைகள் வாரத்தின் ஞாயிற்று கிழமைகளில் செயல்படும். வெள்ளிக்கிழமை பணி செய்வதால் வேறொரு நாளில், ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.