அம்மா பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!!

தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் தங்கம்மாள் நடுநிலைப்பள்ளியில் ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (23.2.2020) நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜ் அவர்கள் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்து கண் குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கண் கண்ணாடிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி சண்முகநாதன், ராஜலட்சுமி கல்வி குழும சேர்மன் திரு. ஆறுமுகநயினார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது: அம்மா அவர்களின் பிறந்த நாளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் விழாவாகவே நடத்தப்படும். அம்மா அவர்கள் தமிழக மக்கள் அனைத்து நிலைகளிலும் சிறப்பாக வாழவேண்டும். குறிப்பாக கல்வி பயிலும் மாணவ மாணவியர்கள் எந்தவகையிலும் சிரமப்படக் கூடாது என்பதற்காக பல திட்டங்களை செயல்படுத்தினார்கள். தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் முன்மாதிரியான மாநிலமாகவும் மாற்றிக் காட்டினார்கள். எனவே தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் பகுதியில் ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு இப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனையில் கண் சிகிச்சை முகாம் நடத்துவது மகிழ்ச்சிக்குரியது. இப்பகுதி மக்கள் முகாமினை பயன்படுத்தி மருத்துவ பரிசோதனைகளை செய்து நோயற்ற வாழ்வை பெற வேண்டும் என பேசினார்.

முகாமில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன்