அவசர உதவிகள், ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும் : ஸ்பார்க் தன்னார்வ அமைப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு வரும் 14 ம் தேதி வரை தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். தேவையின்றி வெளியே வருவோர் மீது வழக்குப் பதியப்படுகிறது. இந்நிலையில் ஸ்பார்க் தன்னார்வ அமைப்பு பொதுமக்களுக்கு உதவ முன் வந்துள்ளது.

அதன்படி தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் அவசர உதவிகள், ஆலோசனைகள் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு கால் செய்யுமாறு ஸ்பார்க் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் எண் : 93843 20728. அழைக்கும் பொதுமக்களுக்கு ஸ்பார்க் அமைப்பின் தன்னார்வலர் குழு  உதவி செய்ய காத்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.