29 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா!!! – தங்கமனசு திட்டம்

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று நடைபெற்றது. நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து கூட்டத்தில், தூத்துக்குடி வட்டம் பேருரணி கிராமம் புல எண் 297/6-ல் 29 திருநங்கைகளுக்கு தலா ரூ.50,000/- மதிப்புள்ள இலவச வீட்டுமனை பட்டா நிலங்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம்,
தூத்துக்குடி வாழ் திருநங்கைகளான தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு அளித்தன் அடிப்படையில் எங்கள் மனுவை பரிசீலித்து தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணியில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை நிலங்களை ஒதுக்கி அதற்கான பட்டாக்களை மொத்தம் 29 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளார். இந்த இடத்தில், மாவட்ட ஆட்சியரின் தங்கமனசு திட்டத்தின் கீழ் வீடுக்கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு எங்களது நன்றி என இதுகுறித்து திருநங்கை ஆர்த்தி பேட்டி அளித்துள்ளார்.