இலவச இருதய பரிசோதனை முகாம் : கோவில்பட்டி

கோவில்பட்டி ரோட்டரி சங்கம், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை இணைந்து கோவில்பட்டி வெங்கடேஷ் நகா் சௌபாக்யா மஹாலில் பிறந்த குழந்தை முதல் 16 வயது வரை உள்ளவா்கள் அனைவருக்கும் இலவச இருதய பரிசோதனை முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 8) நடைபெறுகிறது. அனைவரும் கலந்து பயன்பெற வேண்டுமென ரோட்டரி சங்க மாவட்டத் தலைவா் விநாயகா ஜி.ரமேஷ் அறிவித்துள்ளார்.