அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச புற்றுநோய் தடுப்பு மற்றும் பரிசோதனை முகாம் : தூத்துக்குடி

நெல்லை கேன்சர் கேர் சென்டர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இலவச புற்றுநோய் தடுப்பு மற்றும் பரிசோதனை முகாம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைப்பெற்றது. இந்த முகாமில் அரசு அலுவலர்களுக்கு ரத்த அழுத்தம், சக்கரை மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.  முகாமினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,  துவக்கி துவக்கி வைத்தார். இன்று நடைபெறும் இந்த முகாமில் அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  தெரிவித்தார்.  மேலும் நிகழ்ச்சியில் கூடுதல் வருவாய் ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குநர் மரு.ஷாம்ளா, மாவட்ட விரிவாக்க அலுவலர் மரு.செந்தில்குமார், நெல்லை கேன்சர் கேர் சென்டர் இயக்குநர் மரு.ராம்குமார், துணை இயக்குநர் குடும்ப நலத்துறை மரு.பொன்இசக்கி மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.