தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்ல மாணவர்கள் இலவச பேருந்து வசதி.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் புராதாண அடையாளங்களில் முக்கியமான ஒன்றான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலின் குடமுழுக்கு விழாவை காண தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தஞ்சாவூருக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் பெரிய கோவிலை பார்க்க வரும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் ஏறினாலே அவர்கள் பயண சீட்டு இல்லாமல் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.