டெல்லி பெண்ணை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த ஐவரில் நால்வருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2018 நவ.2-ல் தஞ்சாவூர் மாவட்டத்தின் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் பயிற்சிக்கு வந்த டெல்லி பெண்ணை கடத்திச் சென்று வன்கொடுமை செய்த 5 நபர்களும் குற்றவாளிகள் என தஞ்சை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியது.

இதில் கும்பகோணத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.