செக்காரக்குடியில் கழவுநீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழப்பு: தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் கழிவுநீரை அகற்றிய போது கழவுநீர் தொட்டிக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழந்தனர் – சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியில் கழிவுநீரை அகற்றுவதற்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28), ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேர் வேலைக்கு வந்துள்ளனர்.  இதில் முதலில் 2 பேர் தொட்டியில் இறங்கி நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் மீதமுள்ள 2 பேரும் தொட்டியில் இறங்கியுள்ளனர்.

நீண்ட நேரமாகியும் 4 பேரும் மேலே வராததால் தொட்டியில் பார்த்த போது 4 பேரும் மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.