முன்னாள் படைவீரர் நல மையத்திற்கு பகுதி நேர துப்புரவு பணிக்கு விண்ணப்பிக்கலாம் -ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் டூவிபுரத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல மையத்திற்கு தற்காலிக பணி அடிப்படையில் பகுதி நேர ஊழியராக துப்புரவு பணியாளர் இடம் ஒன்று நிரப்பிடவும்,

இதற்கான ஊதியம் பிரதி மாதம் ரூ.5,000/- வழங்கப்படும் என்றும், இப்பணிக்கு பணிபுரிய விருப்பமுள்ள ஆண் மற்றும் பெண் நபர்கள் வயது வரம்பு (55-க்குள்) தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்ப விண்ணப்பத்தினை எழுத்து மூலமாக நாள் 20-07-2020- அன்று மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0461-2902025- யை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.