முன்னாள் மாநில பொதுச்செயலாளர் திரு.S.R. சரவணப் பெருமாள் அவர்கள் 3வது ஆண்டு நினைவு நாள் -தூத்துக்குடி

தூத்துக்குடி : முன்னாள் மாநில பொதுச்செயலாளர் திரு.S.R. சரவணப் பெருமாள் அவர்கள் 3வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதாகட்சி சார்பாக இன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி Dr. S.R.ருக்மணி அவர்கள் தலைமையிலும் முன்னால் மாவட்ட தலைவர் திரு.M.பாலாஜி அவர்கள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் திரு.P.M.பால்ராஜ் அவர்கள், வடக்கு மாவட்ட தலைவர் திரு.P.ராமமூர்த்தி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். மேற்படி நிகழ்ச்சியில் கோட்ட அமைப்பு செயலாளர் D.ராஜா, மாநில வர்த்தகபிரிவு தலைவர் AN.ராஜாகண்ணன், நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் N.தேவகுமார் அவர்களும் மற்றும் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.